News February 11, 2026
சற்றுமுன்: பள்ளியில் நடந்த கொடூரம்.. 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Similar News
News February 19, 2026
பிரேமலதா போட்டியிடும் தொகுதி இதுவா?

திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் பிரேமலதா, தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில், இவர் விருதாச்சலம் (அ) ரிஷிவந்தியத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் 2006, 2011-ல் வென்றார் விஜயகாந்த். எனவே இந்த செண்ட்டிமெண்ட்டை அவர் கையில் எடுக்கலாம் என்கின்றனர். விஜயபிரபாகரனும் விருதுநகரில் களமிறங்கலாம் என பேசப்படுவதால் அந்த 1 MP சீட் யாருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
News February 19, 2026
கேப்டன் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது: பாஜக காட்டம்

தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் என பாஜக பதிவிட்டுள்ளது. திமுக மக்களுக்கு விரோதமான கட்சி என குறிப்பிட்டிருக்கும் பாஜக, விஜயகாந்துக்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவுக்கும் திமுக பல கொடுமைகளையும், அவமானங்களையும் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், திமுக – தேமுதிக கூட்டணி உருவாகியிருப்பதை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது எனவும் விமர்சித்துள்ளது.
News February 19, 2026
பெண் குழந்தைகளின் படிப்புக்கு காசு தரும் திட்டம்

கிராமப்புறங்களில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு TN அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, 3 – 5-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ₹500-ம், 6-வது பயிலும்போது ₹1000-ம் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும். SHARE.


