News December 11, 2025
சற்றுமுன்: நடிகர் கார்த்தி-க்கு அதிர்ச்சி

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் படத்தின் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜூன்லால் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பிய செலுத்திய பிறகே படம் வெளியிட வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, இதே காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.
Similar News
News March 29, 2026
அப்போ ஸ்டாலின்.. இப்போ உதயநிதிக்கு எதிராக போட்டி

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் DCM உதயநிதியை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 2021-ல் CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முன்னதாக, 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் CM ஸ்டாலினை விட 2,468 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆதிராஜாராம் தோல்வியடைந்திருந்தார். இம்முறை எப்படி இருக்கும்?
News March 29, 2026
AC, TV விலை ₹9,000 வரை உயர்கிறது!

உதிரி பாகங்கள் விலை உயர்வு, விநியோகத் தடை உள்ளிட்ட காரணங்களால் எலக்ட்ரானிக் பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக AC, வாஷிங் மெஷின், TV விலை வரும் 1-ம் தேதி முதல் உயரும் என Hisense நிறுவன CEO பங்கஜ் ராணா தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் 10% – 12% வரை அதாவது ₹5,000 – ₹9,000 வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சம்மரில் AC வாங்க நினைத்தோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News March 29, 2026
தொகுதி மாறிய அதிமுக தலைகள்

கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன் களமிறங்குகிறார். கடந்த முறை ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆதிராஜாராம், இம்முறை உதயநிதிக்கு எதிராக சேப்பாக்கத்தில் களமிறங்கிறார். அதேபோல், கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த முறை சீட் மறுக்கப்பட்ட சாத்தூர் EX MLA ராஜவர்மன், இம்முறை திருச்சுழியில் தங்கம் தென்னரசுக்கு எதிராக போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>


