News December 21, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்.. EPS அதிர்ச்சி

அதிமுகவில் இருந்து <<18622534>>EPS-ஆல் நீக்கப்பட்ட ராமநாதபுரம் நிர்வாகிகள் 4 பேர்<<>> திமுகவில் இணைந்துள்ளனர். கட்சிக் கொள்கைகளை மீறியதாக இன்று மதியம்தான் அவர்களை அதிமுகவில் இருந்து EPS நீக்கினார். ஒருநாள் கூட முடியவில்லை, அதற்குள் அந்த நிர்வாகிகள் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுமாறு அவர்களுக்கு கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 28, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், PM KISAN திட்டத்தின் அடுத்த தவணை வரவு வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வழக்கம்போல் இத்திட்டத்தின் கீழ் 22-வது தவணையாக ₹2,000 பிப்ரவரியில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும்.
News January 28, 2026
இந்தியாவின் வெற்றிநடையை தடுக்குமா நியூசிலாந்து?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மறுபக்கம் தொடர் தோல்வியால் துவண்டிருக்கும் நியூசி., அணி இன்று வெற்றிக்காக போராடும். இன்னும் ஒரு வாரத்தில் டி20 WC தொடங்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே நிச்சயம் வரிந்துகட்டும்!
News January 28, 2026
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்., 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் 2 முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.


