News November 17, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News November 17, 2025
தவெக பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் அட்டை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவில் பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கட்டங்களாக தவெகவில் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இந்த QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கு இதுதான் சரியான வயது!

குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்க, ஆண்கள் லேட் மேரேஜ் செய்வதும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு. வயது அதிகரிக்க உடல்செயல்பாடும், விந்தணுக்களின் தரமும் குறைவதே இதற்கு காரணம். ஆண்களின் குழந்தை பெறும் திறன் 22-25 வயதில் உச்சத்திலும், 35 வயதுவரை சிறப்பாகவும் இருக்கும். ஆனால், 40-45 வயதுக்கு மேல் விந்தணு தரம் குறைவதால் கருச்சிதைவு, சிசு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, ரொம்ப லேட் பண்ணாதீங்க மக்களே!