News November 9, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரி என தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்த பிரபல எழுத்தாளர் எஸ்.பத்மநாபன்(91) காலமானார். வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், குமரி வரலாற்று மற்றும் கலாசார ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும் இருந்துள்ளார். பத்மநாபன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News November 9, 2025
பிஹாரில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

பிஹாரில் அனல் பறந்த 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 122 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. 3.70 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிக்க உள்ள நிலையில், 1,307 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
News November 9, 2025
BREAKING: விஜய் அப்பாவுக்கு முக்கிய பொறுப்பு

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, SAC தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது, ₹8 கோடி வரை முறைகேடு நடந்ததாக SAC குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குழு அளிக்கும் தகவலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
அடி அலையே ஸ்ரீலீலா PHOTOS

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே, தனது நடனம் மற்றும் நடிப்பு மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்துவிட்டார். புஷ்பா- 2 படத்தில் ஆடிய ஆட்டத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவரது சமீபத்திய போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


