News November 6, 2025
சற்றுமுன்: தங்கம் விலை மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி நேற்று 1 அவுன்ஸ்(28g) தங்கம் $3,941.48-க்கு விற்பனையான நிலையில், இன்று(நவ.6) $33 உயர்ந்து $3,974.46-க்கு விற்பனையாகிறது. நேற்று, சர்வதேச சந்தையிலும், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இன்று சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளதால் இது நம்மூரிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News February 7, 2026
காங்கிரஸ் இருந்தால் அது மதச்சார்பற்ற கூட்டணி: கார்த்தி

தமிழகத்தில் 1967-க்கு பிறகு தனித்து நின்று வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் இருந்தால்தான் அது மதச்சார்பற்ற கூட்டணி; காங்கிரஸ் கட்சியை வெறும் கூட்டலாக மட்டும் பார்க்காமல், பெருக்கலாக பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News February 7, 2026
ராசி பலன்கள் (07.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 7, 2026
U19 பைனலில் 5 விக்கெட்கள் வீழ்த்திய தமிழர்கள்

U19 WC-ல் பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா <<19069828>>கோப்பையை கைப்பற்றியது<<>>. இந்தியாவின் வெற்றிக்கு தமிழர்கள் இருவர் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிஷ் 3 விக்கெட்டும், மற்றொரு தமிழக வீரரான தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியை 311 ரன்களில் சுருட்ட உதவிய தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


