News December 27, 2025
சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,680 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹5,600 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.
Similar News
News December 31, 2025
தலையீடு இல்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா-பாக்., இடையே மத்தியஸ்தம் செய்ததாக <<18719653>>சீனா தெரிவித்தது<<>>. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் 3-ம் தரப்பு இடம்பெறவில்லை என்று இந்தியா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தம், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் ஆலோசித்த எடுத்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
News December 31, 2025
நிறைவான சந்தோஷத்தை புத்தாண்டு வழங்கட்டும்: EPS

அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டில் TN மக்களுக்கு நிறைவான சந்தோஷம், நிறைந்த செல்வம், நீடித்த ஆயுள் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
News December 31, 2025
Google Earth-ல் டைம் டிராவல் பண்ணலாம் தெரியுமா?

நீங்கள் இருக்கும் ஏரியா 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை தெரிஞ்சுக்கணுமா? ➤Google Earth-க்குள் செல்லுங்கள் ➤இதில் ‘Explore Earth’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால், மேலே ‘View’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Show Historical Imagery’ ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க. இப்படி செய்தால் பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வசிக்குமிடம் எப்படி இருந்தது என Time Travel செய்து பார்க்கமுடியும். SHARE.


