News February 26, 2026

சற்றுமுன்: செங்கோட்டையன் அதிரடி

image

<<19241534>>தவெகவுக்கு போனவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வர தயாராக உள்ளார்கள்<<>> என SP வேலுமணி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து ஈரோட்டில் பேசிய KAS, எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்கட்டும். எத்தனை பேர் தவெகவை நோக்கி வருகிறார்கள் என்பதை காண்பீர்கள் என தெரிவித்தார். அத்துடன், அதிமுகவில் தனக்கு என்ன மரியாதை கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும் எனவும் KAS கூறியுள்ளார்.

Similar News

News February 27, 2026

எதற்கு MLA-க்களுக்கு ₹9,000 Phone சலுகை?

image

கிட்டத்தட்ட அனைத்து டெலிகாம் நெட்வொர்க்கிலும் ₹350-க்கு மாதம் Unlimited calls வசதி கிடைக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், நாட்டின் MLA-க்களுக்கு எதற்கு ₹9,000 Phone சலுகை அளிக்கப்படுகிறது என்ற கேள்வியை ஆம் ஆத்மி MP ராகுல் சத்தா நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். அவரது கருத்துக்கு நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவு எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News February 27, 2026

BREAKING: திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

image

அதிமுக MLA-க்களான OPS(போடி), ஐயப்பன்(உசிலம்பட்டி) ஆகியோர் சற்றுமுன் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தனர். அவர்களுடன் முன்னாள் MP-யும், OPS-ன் மகனுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்துள்ளார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், செங்கோட்டையன் ஆகியோர் மாற்றுக் கட்சியில் இணைவதற்கு முன்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனால், இவர்கள் இருவரும் இதுவரை பதவியை ராஜினாமா செய்யவில்லை.

News February 27, 2026

தவெகவுக்கு No.. நாளை திமுக – காங்., பேச்சுவார்த்தை

image

தவெகவுடன் காங்., மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே ராகுல் காந்தி தமிழக பயணத்தை தள்ளி போட்டுக்கொண்டே செல்வதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நாளை திமுக – காங்., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனால், இந்த கூட்டணி உறுதியாகிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 30+ சீட்களை கேட்க காங்., விருப்பம் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!