News November 17, 2025
சற்றுமுன் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தேமுதிக?

மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் தென் மாவட்ட அதிமுக முக்கியத் தலைவர்களும் இருக்கின்றனர். ஜனவரி மாதம் கடலூர் மாநாட்டில் அல்லது அதற்கு முன்னதாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று பிரேமலதா கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Similar News
News November 17, 2025
RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

<<18309708>>ஆரஞ்சு அலர்ட்டால்<<>> தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது கவனமாய் இருங்கள் நண்பர்களே!

அவசரகதியில் நடக்கும் SIR பணிகள்: சீமான்

SIR பணிகளை அவசரகதியில் மேற்கொள்வது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முறையாக சீர்திருத்தம் செய்ய நினைத்திருந்தால் குறைந்தது ஓராண்டு கால அவகாசம் எடுத்து இப்பணிகளை செய்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கான வாக்காளர்களை ஆட்சியாளர்கள் தேர்வு செய்வதே SIR எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், ஒரே மாதத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.