News December 15, 2025
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்

NDA கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என TTV தினகரன் விளக்கமளித்துள்ளார். கூட்டணி குறித்து டிச.31-க்குள் முடிவெடுக்க நினைத்ததாகவும், ஆனால் தற்போது பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறினார். அண்மையில், <<18509410>>TTV தினகரனை சந்தித்து அண்ணாமலை<<>> பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 13, 2026
நல்லா படித்த குழந்தை இப்போ Dull-ஆ படிக்குதா?

நன்றாக படித்து வந்த உங்கள் குழந்தை திடீரென குறைவான மதிப்பெண் வாங்குகிறார்களா? அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த இவற்றை செய்யலாம். ▶குழந்தையை முட்டாள் என கூற வேண்டாம் ▶எப்போதும் 1st Rank எடுக்க சொல்லாதீர்கள் ▶ படிக்கும்போது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் சாதனங்களை ஒதுக்கிவையுங்கள் ▶பள்ளியில் ஏதேனும் பிரச்னையா என கேளுங்கள் ▶விளையாட அனுப்புங்கள் ▶ சின்ன சின்ன பாராட்டுகளை வழங்குங்கள். SHARE.
News April 13, 2026
கடலிலும் பாகிஸ்தானை கதறவிடும் BLA

ஈரான் எல்லை அருகே பாகிஸ்தான் கடலோரப் படை ரோந்து படகின் மீது பலுசிஸ்தான் விடுதலை படை(BLA) நடத்திய தாக்குதலில் 3 பாக்., வீரர்கள் உயிரிழந்தனர். கடல்சார் எல்லைகளில் தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய உத்தி இது என BLA கூறியுள்ளது. BLA-வுக்கு ஆப்கானிஸ்தான் அரசு புகலிடம் அளிப்பதாக பாக்., குற்றஞ்சாட்டும் நிலையில், அதற்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
News April 13, 2026
கேபிள் சேனலில் ’ஜன நாயகன்’… அதிர்ச்சி

இணையத்தில் லீக்கான ’ஜன நாயகன்’ படம் கோவையில் லோக்கல் கேபிள் டிவி ஒன்றில் ஒளிபரப்பானது தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.11-ம் தேதி ‘ராசி பிரைம் மூவி’ என்ற லோக்கல் கேபிள் சேனலில், HD தரத்தில் படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதுகுறித்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில், கேபிள் ஆபரேட்டர் பழனிசாமி மீது FIR பதிவுசெய்த போலீசார், 4 ஹார்ட் டிஸ்க் & ஒரு கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.


