News December 13, 2025
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால், கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜன.9-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இந்த பேச்சின் மூலம் கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Similar News
News March 2, 2026
பொடுகு தொல்லையா? ஈசி தீர்வு இருக்கு

மக்களே, பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். இதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னையை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
சங்கீதாவை பற்றி ஆபாச பதிவு.. விஜய்க்கு கடும் எதிர்ப்பு

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
News March 2, 2026
3 US போர் விமானங்களை தவறுதலாக சுட்ட குவைத்

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.


