News December 15, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

<<18572433>>தங்கம்<<>> விலைக்கு சற்றும் சளைக்காமல் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 1 கிலோ வெள்ளி இன்று மட்டும் ₹5,000 அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹215-க்கும், 1 கிலோ ₹2.15 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலையேற்றம் கண்டு வரும் வெள்ளி, கடந்த 1 வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ₹17,000 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 1, 2026
எலும்புகளின் வலிமைக்கு தொய்யல்கீரை சாப்பிடுங்க

வயல்வெளிகளின் ஓரங்களில் வளரக்கூடிய தொய்யல்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஃபோலேட் உள்ளிட்ட சத்துகளை அடக்கிய தொய்யல்கீரை உடலில் ரத்தத்தை சுத்தம் செய்யும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும், நாடி நரம்புகளை வலுவாக்கும், மலச்சிக்கலை தீர்க்கும். இதில் ஃபோலேட் அதிகம் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
News April 1, 2026
தொழிற்சாலையில் பயங்கர விபத்து.. 15 பேரின் நிலை?

பஞ்சாபின் லூதியானா அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் சரிந்துள்ளது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்கும் பணியில் போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News April 1, 2026
ஏப்ரல் 1 : வரலாற்றில் இன்று

*முட்டாள்கள் நாள் *1861–அரசியல்வாதி டி.என்.சிவஞானம் பிறந்தநாள் *1917–கவிஞர் திருலோக சீதாராம் பிறந்தநாள் *1935– இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம் *1957–1 பைசா நாணயம் அறிமுகம் *1976–கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடக்கம் *2004– G-Mail சேவை தொடக்கம் *2002– பாடகர் கே.வீ.நாராயணசுவாமி நினைவு நாள் *2007– தமிழறிஞர் தி.வே.கோபாலையர் நினைவு நாள் *2007–கட்டடக் கலைஞர் லாரி பேக்கர் நினைவு நாள்


