News February 28, 2026

சற்றுநேரத்தில் கூட்டணி அறிவிப்பு

image

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை சற்றுநேரத்தில் ராமதாஸ் அறிவிக்கவிருக்கிறார். அன்புமணிக்கு எதிரான (கட்சி சின்னம்) வழக்கை நேற்று வாபஸ் வாங்கிய நிலையில், அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக பாஜக சார்பில் திறக்கப்பட்டுள்ள NDA கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் முன்பு கட்டப்பட்டுள்ள தோரணத்தில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Similar News

News April 9, 2026

களமிறங்கும் விஜய்.. பின்வாங்குகிறாரா சூர்யா?

image

பல பிரச்னைகளை தாண்டி ஒருவழியாக மே 14-ல் சூர்யாவின் கருப்பு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு 1 வாரம் முன்னதாக விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸாகப் போவதாக வரும் தகவல்கள் கருப்பு படக்குழுவினருக்கு மீண்டும் குழப்பத்தை கொடுத்திருக்கிறதாம். விஜய்யுடன் மோதி பார்க்கலாமா அல்லது மீண்டும் கருப்பு பட ரிலீஸை சில வாரங்களுக்கு தள்ளிவைக்கலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

News April 9, 2026

அண்ணாமலைக்கு தோல்வி பயம்: கனிமொழி

image

தோல்வி பயத்தில் திமுக இருப்பதாக, அண்ணாமலை விமர்சித்ததற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக எதற்காக பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால், அண்ணாமலை தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என விமர்சித்துள்ளார். அவருக்கு தான் தோல்வி பயம் இருக்கிறது எனவும் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 9, 2026

கடைசி நேரத்தில் இடைத்தேர்தல் ரத்து.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

கோவாவின் ‘போண்டா’ தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. போண்டா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. ஆனால், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளதால் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த மும்பை கோர்ட் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை அறியாமல் ஓட்டுப் போடச் சென்ற பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

error: Content is protected !!