News January 31, 2026
சர்வாதிகாரிகளின் DNA இபிஎஸ்: MRK பன்னீர்செல்வம்

CM ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுவதாக <<19014905>>EPS <<>>விமர்சித்ததற்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மோடி என்ற சர்வாதிகாரியை போற்றும் EPS, சர்வாதிகாரி பற்றி பாடம் எடுப்பதா என்றும், உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் DNA-வாக EPS உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து EPS-யின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
விஜய்க்கு எதிராக Edit செய்த போட்டோ வைரல்

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதனை Edit செய்து, தொகுதி என்ற இடத்தில் ‘பனையூர்’ என்று எழுதிருப்பதாக போலியான படத்தை வைரலாகி வருகின்றனர்.
News February 8, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. ஜன.29-ல் ஒரு சவரன் ₹1,34,400 ஆக விற்பனையான நிலையில், நேற்று ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 நாள்களில் சவரனுக்கு ₹19,040-ஐ குறைந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பதால், வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 8, 2026
கரும்பு விவசாயி சின்னத்தால் நாதகவுக்கு பாதிப்பு வருமா?

நாதகவின் அடையாளமாக இருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது இந்திய குடியரசு கட்சிக்கு <<19075770>>ஒதுக்கப்பட்டதால்<<>>, வரும் தேர்தலில் குழப்பம் ஏற்படுமா என கேள்வி எழுந்தது. ஆனால், அக்கட்சி NDA-ல் அங்கம் வகிப்பதால் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட வாய்ப்பு இல்லை; அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாததால், இங்கு தொகுதிகளை ஒதுக்கவும் வாய்ப்பு இல்லை; அதனால் எந்த பிரச்னையும் இல்லை என நாதகவினர் கூறுகின்றனர்.


