News November 11, 2024
சர்வதேச ஸ்குவாஷ் தொடரை வென்ற அனாஹத்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் (16) சாம்பியன் பட்டத்தை வென்றார். சிட்னியில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அவர், சீனாவின் ஹெலனை எதிர்கொண்டார். தொடர்ந்து அசத்திய அனாஹத் 3-1 என்ற செட் கணக்கில் கோப்பையை வசப்படுத்தினார். நடப்பு ஆண்டில் நார்த் கோஸ்ட் தொடர் உள்ளிட்ட 7 சர்வதேச கோப்பைகளை அவர் வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 11, 2025
நாடாளுமன்றத்தின் செலவு: நிமிஷத்துக்கு ₹2.5 லட்சம்!

நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் நாடாளுமன்ற நடைபெற எவ்வளவு செலவாகும் என தெரியுமா? ஒரு நிமிடம் நாடாளுமன்ற நடக்க ₹2.5 லட்சம் செலவாகிறதாம். அதுவே தனித்தனியாக ராஜ்ய சபா, லோக் சபா நடந்தால், ₹1.5 லட்சம் செலவாகிறதாம். இது MP-க்களின் சம்பளம், சலுகைகள், மின்சாரம் – தண்ணீர் செலவு, செக்யூரிட்டி & ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.
News December 11, 2025
கார் விபத்தில் நடிகை மரணம்

The Marvelous Mrs Maisel (amazon prime), நியூ ஆம்ஸ்டர்டாம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை வென்னே ஆல்டன் டேவிஸ் (60) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நியூயார்க்கில் சாலையை கடக்க முயன்றபோது டேவிஸ் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 11, 2025
சென்னையில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து

DGCA-வின் <<18476353>>புதிய விதிமுறைகளை<<>> நடைமுறைப்படுத்த முடியாமல் திணறி வரும் இண்டிகோ, இன்றும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும்(24), மற்றும் சென்னைக்கு வரும்(12) 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 70 விமானங்கள் ரத்தான நிலையில், அது தற்போது பாதியாக குறைந்துள்ளது கவனிக்கதக்கது. விரைவில் நிலைமை முற்றிலும் சீராகும் என இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


