News January 12, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சம்!

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 (இந்திய மதிப்பில் ₹7,490) உயர்ந்து $4,575-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $83-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று 9:30 மணிக்கு தங்கம், வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
Similar News
News February 4, 2026
3,979 பணியிடங்கள்.. உடனே APPLY பண்ணுங்க

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட்டில் 3,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ பிரிவு பணிக்கு மாதம் ₹8,200, ஐடிஐ அல்லாத பிரிவுகளுக்கு ₹9,600 சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச்.3-க்குள் இந்த <
News February 4, 2026
இதய ஆரோக்கியத்திற்கு இதை பண்ணுங்க!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த 6 தினமும் பின்பற்ற டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். *காலையில் வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீர் குடிக்கவும் *சர்க்கரை குறைவான புரத உணவை காலையில் சாப்பிடவும் *5 நிமிடங்களுக்கு தியானம் செய்யவும் *சூரிய வெளிச்சத்தில் 15 நிமிடங்களுக்கு நடக்கவும் *30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடவும் *காலையில் எழுந்த பிறகு 30 நிமிடங்களுக்கு செல்போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.
News February 4, 2026
இதை நினைத்தால் கவலையாக இருக்கு: தோனி

இந்திய டி20 அணியை மிகவும் அபாயகரமான அணி என தோனி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனுபவம், கடினமான சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பனிப்பொழிவின் தாக்கத்தினால் போட்டிகளின் முடிவுகள் மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதுமட்டுமே தனக்கு கவலை தரக்கூடிய விஷயம் என பேசியுள்ளார்.


