News December 27, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் இன்று ₹4,906 உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(டிச.27) ஒரே நாளில் இந்திய மதிப்பில் ₹4,906 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹1,03,120-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54.63(₹4,906) உயர்ந்து $4,534-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் $323(₹28,821) உயர்ந்துள்ளது.
Similar News
News December 31, 2025
தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, சிவன், மீனாட்சி, திருக்குறளை எப்படி சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாதோ, தீபம் ஏற்றுவதையும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் காட்டாமாக குறிப்பிட்டுள்ளார்.
News December 31, 2025
திமுக கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

காங்., உள்கட்சி விவகாரத்தில் விசிக, CPI, மதிமுக தலையிட வேண்டாம் என MP மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார். பிரவீன் <<18704694>>TN-ஐ உபி உடன்<<>> ஒப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி விஷயங்களை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தானது என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். மேலும், BJP–RSS-க்கு எதிரான கூட்டு வலிமையை இது பலவீனப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
நயன்தாராவின் கில்லர் லுக்!

யஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலிஷாக கேசினோ நுழைவாயிலில் நிற்கும் நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயர் ’கங்கா’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு யஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் டாக்ஸிக் மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.


