News March 9, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.

Similar News

News April 9, 2026

1 பேரலுக்கு 1 டாலர்.. ஈரானின் வசூல் வேட்டை!

image

ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை அனுமதிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு பேரலுக்கு ஒரு டாலர் என கிரிப்டோகரன்சி மூலம் கட்டணத்தை வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. 2 வார போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்கள் அனுப்புவதை தடுக்க, கப்பல்களை முழுமையாக சோதித்த பிறகே அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கட்டணத்தால் இந்தியாவில் விலை வாசி உயருமா என கேள்வி எழுந்துள்ளது.

News April 9, 2026

இன்று வாக்குப்பதிவு.. நேற்றிரவு விலகிய காங்., வேட்பாளர்

image

அசாம் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்றிரவு அம்மாநிலத்தின் உதல்குரி தொகுதி காங்., வேட்பாளர் சுரேன் தைய்மரி, தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் சீட் கொடுத்தார்களே தவிர, அடுத்தக்கட்ட பணிகளுக்கான எந்த ஆதரவும் தலைமையிடம் இருந்து கிடைக்கவில்லை என கூறியுள்ளார். தாமதமான முடிவு என்பதால், VVPAT-ல் அவரது பெயரும் இடம்பெற்றிருக்கும்.

News April 9, 2026

மட்டன் சாப்பிடும்போது மரணம்

image

மட்டன் சாப்பிட்டும்போது தொண்டையில் சிக்கியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பனோத்து பிச்சா(54), டின்னருக்காக ஆசை ஆசையாய் மட்டன் சாப்பிட்டிருக்கிறார். அப்போது ​​ஒரு துண்டு அவரது தொண்டையில் சிக்கி முச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்பிடலுக்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. மனிதர்களுக்கு இறப்பு எப்படியெல்லாம் வருகிறது என பார்த்தீங்களா?

error: Content is protected !!