News June 9, 2024
சர்வதேச அளவில் சாதித்த மாணவர்கள்

கோவையில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் பரவை ஆசான் காட்டுராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் வயது மற்றும் போட்டி பிரிவுகளில் 11 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். இதையடுத்து பரவையில் மாணவ மாணவியருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
Similar News
News February 5, 2026
மதுரை: முன்விரோத தாக்குதல்; சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

சமயநல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(50). இவர் இன்று மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் தோடனேரி ரயில்வே கேட் அருகே நடந்து சென்றார். அப்போது முன் விரோதம் காரணமாக அவர்களை வழிமறித்த சந்தானபிரபு(22) பாரத் குமார்(18), சின்னக் கருப்பு(16), கார்த்திக்(17), நந்தகுமார் ஆகியோர் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கினர். சமயநல்லூர் போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 5, 2026
மதுரையில் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் போலீ டீ தூள், மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 697 கிலோ டீ தூள், 100 கிலோ மசாலா தூள் போலி லேபில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜன.31 அன்று விருதுநகரில் 13.5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.