News January 23, 2025

சர்ப்ப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி பவனி

image

குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு தை திருவிழா கடந்த 17ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6வது நாள் நாளான நேற்று(ஜன.22) அய்யா வைகுண்டசுவாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 15, 2025

குமரி: மாமியாரை தாக்கிய Ex. ராணுவ வீரர்

image

மாத்தார் தத்தன் விளையை சேர்ந்தவர் தங்கலெட் (64). இவரது மகளின் கணவர் கொல்வேலைச் சேர்ந்த Ex. ராணுவ வீரர் கிளீட்டஸ் (43). மகளுக்கும் கிளீட்டசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வெளியூரில் உள்ளார். 2 நாட்கள் முன்பு கிளீட்டஸ் மாத்தாரில் தங்கலெட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். காயமடைந்த தங்கலெட் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி. நேற்று திருவட்டார் போலீசார் கிளீட்டசை கைது செய்தனர்.

News November 15, 2025

குமரி:இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 15, 2025

குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

image

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!