News January 13, 2026
சர்ச்சையில் சிக்கிய BRICS-ன் புதிய லோகோ!

பிரிக்ஸ் 2026 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிலையில் அதற்கான புதிய லோகோ மற்றும் இணையதளத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். மேலும் இந்தாண்டு தலைமையேற்றுள்ள இந்தியா, மனிதநேயமே முதன்மை & மக்கள் மைய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. எனினும் 2016-ம் ஆண்டு வெளியான BRICS லோகோவுடன் ஒப்பிட்டு, பெரிய மாற்றங்கள் செய்யாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
விமானங்கள் பறக்க தடை.. அரசின் திடீர் உத்தரவு ஏன்?

பிப்.5,6-ல் வங்கக்கடலுக்கு மேல் சுமார் 3,190 km-க்கு விமானம் இயக்குவதற்கு NOTAM மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி அறிவிக்க வெளியிடப்படும் அறிக்கைதான் NOTAM(Notice to Airmen). தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்தியா ஏவுகணையை சோதிக்க திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. Op.சிந்தூருக்கு பிறகு இந்தியா இப்படியான பல சோதனைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

தங்கம் விலை பெரியளவில் மாற்றத்தை சந்தித்து வரும் சூழலில், TN-ல் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. போதிய நிதியில்லை என்பதால் நகைக் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. உங்க பகுதியிலும் பிரச்னை உள்ளதா?
News January 31, 2026
நிதிக்காக பாகிஸ்தான் பிச்சை எடுப்பது அவமானம்: பாக்., PM

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் PM ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக பேசியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தைச் சமாளிக்க உலக நாடுகளிடம் நிதியுதவி கேட்பது தமக்கும், ராணுவத் தளபதிக்கும் மிகுந்த மனவேதனையையும் அவமானத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடன் வாங்குவது நாட்டின் சுயமரியாதையை பாதிப்பதாகவும், வெளிநாடுகளிடம் கையேந்தும்போது தலைகுனிய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


