News January 15, 2026
சர்ச்சையில் சிக்கிய அஜித்

நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித், ரிலையன்ஸின் CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் SM-ல் தற்போது சர்ச்சையாகி உள்ளன. ரொனோல்டோ போன்ற உலக கால்பந்து ஜாம்பவானே இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்கும் நிலையில், அஜித் நடிப்பது ஏன் எனவும், தனது பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட வராத அஜித், இதற்கு மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
3-வது பிரசவத்துக்கு சம்பளத்துடன் விடுமுறை

பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
News January 24, 2026
திமுகவில் ஸ்டாலினுக்கு வந்த புதிய சிக்கல்

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.
News January 24, 2026
டி20 WC-ல் வங்கதேசம் OUT, ஸ்காட்லாந்து IN

பாதுகாப்பு காரணங்களால் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற BCB கோரிக்கை வைத்தது. இதை ஏற்காத ICC அவர்களை டி20 WC-ல் இருந்து நீக்கியது. தற்போது வங்கதேசம் இடம்பெற்ற C பிரிவில் அவர்களுக்கு பதில், ஸ்காட்லாந்து இடம்பெற்றுள்ளது. C பிரிவில் இப்போது நேபாள், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.


