News January 9, 2026
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில், நார்ச்சத்து, வைட்டமின் A உள்ளிட்டவை நிறைந்துள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை, வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. இதனால், உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு கிழங்கு பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News January 30, 2026
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் ரிக்டர் அளவுகோலில் 3-ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், அதன் தாக்கம் சுமார் 20 கிமீ வரை உணரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர்
News January 29, 2026
Best Actress Award: நயன் முதல் சாய் பல்லவி வரை

2016 – 2022-ம் ஆண்டு வரைக்குமான சிறந்த நடிகைகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாம்பு சட்டை (2016) – கீர்த்தி சுரேஷ், அறம் (2017)- நயன்தாரா, செக்கச் சிவந்த வானம் (2018)- ஜோதிகா, அசுரன் (2019) – மஞ்சு வாரியர், சூரரைப் போற்று (2020) – அபர்ணா பாலமுரளி, ஜெய் பீம் (2021) – லிஜோமோல் ஜோஸ், கார்கி (2022)- சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
News January 29, 2026
திமுகவுடன் கூட்டணி.. இறுதியாக அறிவித்தார்

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ‘புதிய திராவிட கழகம்’ கட்சியின் (PDK) தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்டுள்ளதாகவும், பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை PDK நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


