News January 21, 2026
சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Similar News
News January 31, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்தது

தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.31) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹950 குறைந்து ₹14,900-க்கும், சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.
News January 31, 2026
திமுக அரசுதான் டப்பா, டோப்பா எல்லாம் செய்கிறது: வானதி

NDA தேர்தல் பிரசார கூட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான கூட்டத்தை கண்டு திமுக மிகுந்த பதற்றத்தில் உள்ளதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதனால்தான் NDA கூட்டணியை டப்பா இஞ்சின் என்று அவர்கள் பேசுவதாக கூறிய அவர், டப்பா, டோப்பா எல்லாம் எங்களுக்கு தெரியாது; அவற்றை எல்லாம் திமுக அரசு தான் செய்கிறது என்றார். மேலும், TN-ஐ துயரத்தில் ஆழ்த்தும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
‘ஜன நாயகன்’ விவகாரத்தில் மனம் திறந்த விஜய்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சிக்கல்கள் வரும் என தான் முன்பே கணித்ததாக விஜய் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த அவர், பொங்கலுக்கு ரிலீசாக இருந்த ஜன நாயகன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் வேதனையளிப்பதாகவும், தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும் முதல் முறையாக பேசியுள்ளார். இந்த பட விவகாரத்தில் விஜய் ஏன் மவுனியாக இருக்கிறார் என பலரும் விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


