News January 14, 2026
சர்க்கரைப் பொங்கலில் இத்தனை நன்மைகளா?

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை ஸ்வீட்கள் செய்தாலும், பொங்கலுக்கு நிகராக எதையும் கூற முடியாது. வெல்லத்தில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகள் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டம் அளிக்கின்றன. ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்க வெல்லம் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடல் எடை குறையவும் கூட வெல்லம் உதவும். பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யிலும் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேநேரம் அளவாக சாப்பிடுங்கள்.
Similar News
News February 9, 2026
தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; மூதாட்டி படுகாயம்

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம திலகம்(61). இவர் நேற்று (பிப்.08) கார்த்திகேயன் என்பவரது ஆட்டோவில் சின்னமனூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றுள்ளார். ஆட்டோவை கார்த்திகேயன் அதிவேகமாக இயக்கிய நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம திலகம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.
News February 9, 2026
விருத்தாச்சலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா?

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூரில் நடந்த IJK மாநில மாநாட்டில் நிறைவேறிய 11 தீர்மானங்களில் ஒன்றாக விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கையும் வாசிக்கப்பட்டது. அதனை மாநாட்டில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனும் வலியுறுத்தியுள்ளார். இதனால் வரும் தேர்தலில் விருத்தாச்சலம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 9, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,840 உயர்வு

இந்த வார தொடக்கம் முதலே தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹230 உயர்ந்து ₹14,650-க்கும், 1 சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை உயரும் என கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


