News January 10, 2026

சருமம் பளபளக்க இதை குடிங்க!

image

சருமப் பராமரிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, ஒரே இரவில் மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஆனால், தொடர்ச்சியாக சில காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறுகளை அருந்தி வந்தால், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் உள்ள கருவளையங்கள் முதல் தோல் சுருக்கம் வரை அனைத்திருக்கும் தீர்வளிக்கும் ஜூஸ்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

SBI லாபம் 13.06% அதிகரிப்பு

image

SBI வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் 24.5% உயர்ந்து ₹21,028 கோடியை ஈட்டியுள்ளது. மொத்த வருவாயில் 9.7% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒருங்கிணைந்த கணக்குகளின்படி, நிகர லாபம் ₹21,317 கோடியாக பதிவாகியுள்ளது. நிகர வட்டி வருமானம் ₹41,446 கோடியிலிருந்து ₹45,190 கோடியாக 9.4% அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

ஒரே நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், விஜய் PHOTOS

image

சென்னையில் நடைபெற்ற ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழாவில் CM ஸ்டாலின், விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் CM ஸ்டாலின் மனைவியுடன் கலந்து கொள்ள, மாலையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டுள்ளார். காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரின் குடும்ப மரபுப்படி திருமணம் நடந்துள்ளது.

News February 9, 2026

‘சூப்பர் ஹுமன்களை’ உருவாக்க விரும்பிய எப்ஸ்டீன்

image

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது மரணத்திற்கு முன் தனது சொந்த DNA-வை பயன்படுத்தி ‘சூப்பர் ஹூமன்’ மனிதர்களை உருவாக்க முயன்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள தனது பண்ணையில், பெண்களுக்கு தனது விந்தணுக்களை செலுத்தி குழந்தைகளை பெற்றெடுக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் கோப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

error: Content is protected !!