News November 13, 2025
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (நவ.13) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை இறக்கத்துடனே காணப்படுகிறது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் குறைந்து 84,366 புள்ளிகளிலும், நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 25,843 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Ashok Leyland, P&G, Vedanta ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், ONGC, Orient உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
Similar News
News November 13, 2025
விஜய் அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்

விஜய் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று வீரலட்சுமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களை (விஜய்) அரசியல், கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ரசிகை ஒருவர் எனது கண்முன்னே இறந்ததை பார்த்த ஆத்திரத்தில் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்துள்ளார்.
News November 13, 2025
உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும்: PM

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ₹25,060 கோடிக்கான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்திற்கு (EPM) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள PM மோடி, இந்த ஒப்புதல் மூலம் உலக சந்தையில் ‘Made in India’ உரக்க ஒலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளின் சதி: USA

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா சிறப்பாக விசாரணை நடத்துவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய சதித்திட்டம் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக தெரிவித்த அவர், விசாரணையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


