News November 19, 2025

சரிவில் பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கவலை!

image

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 84,641 புள்ளிகளிலும், நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 25,891 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, Bharti Airtel, HDFC Bank, Coal India, Jio Financial உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் பங்குகள் 4% – 6% வரை சரிந்துள்ளன.

Similar News

News April 10, 2026

தவெக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்

image

தன்னை ஏமாற்றி கைவிட்டுவிட்டதாக தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கடரமணன் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 6 ஆண்டுகளாக இத்தம்பதி பிரிந்து வாழும் நிலையில், ஒருமுறை தன்னை அபார்ஷன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். தனது குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டு பல ஆண்டுகளாக குழந்தையை காட்டாமல் உள்ளார் என்றும் புகாரளித்துள்ளார்.

News April 10, 2026

10th போதும், ₹21,000 சம்பளம்.. APPLY NOW

image

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.20-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பியுங்கள். SHARE.

News April 10, 2026

ஸ்டாலின் அளவுக்கு EPS-க்கு தைரியம் இல்லை: OPS

image

கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மக்களை நேரில் சந்தித்த ஒரே CM ஸ்டாலின் தான் என OPS கூறியுள்ளார். EPS-க்கு அந்த அளவு தைரியம் இல்லை என்ற அவர், ஆனாலும் நிலைமையை திறமையாக கையாண்டது போல EPS தற்பெருமை பேசுகிறார் என்றார். இவ்வுலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்களானால், அது EPS தான் எனவும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அவர் தோல்வியையே சந்திப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!