News April 7, 2025
சரவணப்பொய்கையில் மூழ்கி கோவையை சேர்ந்தவர் பலி

மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கோவை தோப்பூன்பட்டியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் பங்கேற்றார். இவர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளரும் ஆவர். இந்நிலையில் நந்தகோபால் நேற்று திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் குளிக்க சென்ற போது கால் தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 9, 2025
மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ., கேமரா

மதுரை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் அதிக குப்பை சேர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தீர்வு காண அதிக குப்பை சேரும் இடங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தில் (டி.ஏ.என். ஐ.ஐ) அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து விரைவில் மாநகராட்சியில் 80 இடங்களில் ஏ.ஐ கேமரா பொறுத்தப்பட உள்ளது.
News April 9, 2025
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL
News April 8, 2025
மதுரை : கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

மதுரை மாவட்ட ஆட்சியர் 0452-2531110, மாவட்ட வருவாய் அலுவலர் 0452-2532106,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் 0452-2533272, மாவட்ட வழங்கல் அலுவலா் 0452-2546125,
பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் 0452-2529054,
ஆதி திராவிடா் (ம) பழங்குடியினா் நல அலுவலா் 0452-2536070,
உதவி இயக்குநா் (நில அளவை) 0452-2525099. மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும் .