News February 4, 2025
சரத்குமாரை வரவேற்ற சுரண்டை பாஜக பிரமுகர்

சுரண்டையை சேர்ந்த தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் கேபிள் பவுன் ராஜ் இன்று தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த திரைப்பட நடிகர் முன்னாள் எம்எல்ஏ சரத்குமாரை வரவேற்றார். உடன் பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News September 29, 2025
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அறிவிப்பு

சரஸ்வதி பூஜை, விஜயதசமி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல் விருதுநகர் சிவகாசி, தென்காசி வழியாக செல்லும் இது ஒரு சேவை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 29, 2025
தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 29, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க