News August 26, 2024
சரக்கு கப்பலை சிறை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இழுவை கட்டணம் தராததால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டால்பின் நம்பர்-1 கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து வருவதற்காக ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் தரவேண்டிய தொகை ரூ.35 லட்சத்தை தரவில்லை என் ஆதித்யா மரைன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சரக்கு கப்பலை சிறை பிடிப்பதுடன் செப்டம்பர் 2-ம் தேதி குறிப்பிட்ட நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை விட்டுவிட்டு லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சென்னை: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த <
News September 17, 2025
பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.