News August 17, 2025
சம்பா பருவத்தில் இயந்திர நடவுக்கு ரூ.2,400 மானியம்: வேளாண் துறை

நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர்களை இயந்திர நடவும் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.2,400 அல்லது ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6000 பின்னேற்பு மானியமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக மையம் (அ) உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளவும் என்று விராலிமலை வேளாண் உதவி இயக்குநர் ப.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
புதுக்கோட்டையில் 20 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 543 மது பாட்டில்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. புதுகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் இவை கைப்பற்றியதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த 20 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
News August 17, 2025
புதுக்கோட்டை: மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழகத்தின் எந்த ஒரு மின் வாரியத்தையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News August 17, 2025
புதுக்கோட்டை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 6 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 763 வருவாய் கிராமங்கள்
▶️ 489 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 13 ஊராட்சி ஒன்றியங்கள்
▶️ 12 வட்டங்கள்
▶️ 45 உள்வட்டங்கள்
▶️ 8 பேரூராட்சிகள்
▶️ 3 கோட்டங்கள்
▶️ 1 நகராட்சி
▶️ 1 மாநகராட்சி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.