News November 27, 2024
சம்பா பயிர்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News September 15, 2025
திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.