News November 23, 2024
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான சம்பா நெற் பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். பதிவு செய்யாத விவசாயிகள், விரைவாக இ-சேவை மையத்துக்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
Similar News
News November 6, 2025
காஞ்சிக்கு மழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.6) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லிட்டு போங்க!
News November 6, 2025
காஞ்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
காஞ்சி: வரதராஜ பெருமாள் கோயிலில் முறைகேடு?

காஞ்சிபுரம், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற தங்க பல்லி சிலை உள்ளது. இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் புணரமைப்பு பணிக்காக மாற்றம் செய்த போது, தங்கம் பல்லியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஶ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


