News March 27, 2026
சம்பளம் வந்ததும் காலியாகுதா.. இத ட்ரிக்ஸ் கவனியுங்க!

*சம்பளம் வந்ததும், அதில் 10- 20% வேற அக்கவுண்ட்டுக்கு மாற்றி சேமியுங்கள். இது மாசக் கடைசியில் உதவும் *வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், இதர செலவுகளுக்கும் ஒதுக்குங்கள் *ஒரு பொருளை வாங்கும் முன், 24 மணிநேரம் வெயிட் பண்ணுங்க. இதனால் அந்த பொருள் உண்மையிலேயே வேணுமா வேண்டாமா என தெளிவாக முடிவெடுக்க முடியும். நண்பர்களுக்கும் இந்த ட்ரிக்ஸை ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 7, 2026
நாய் கடிக்கு தமிழ்நாட்டில் 13 பேர் பலி.. ஷாக் ரிப்போர்ட்!

TN-ல் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தெருநாய்கள் கடிக்கு ஆளாகி வருகின்றனர். இது நகரங்களை விட கிராமங்களில் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்தாண்டு 6,25,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 95 நாள்களில் மட்டும் 2,09,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 7, 2026
பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.
News April 7, 2026
குறுக்கு வழியில் எதிரிகளின் கீழ்தரமான செயல்: சுந்தர்.சி

தேர்தலில் வெற்றிபெற்றால் மதுரை மத்திய தொகுதியில் ‘இறைச்சி கடைகளை மூடுவேன்’ என தான் கூறியதாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியமின்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு வெற்றியால் பதிலடி தருவோம் என கூறியுள்ளார்.


