News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 28, 2025
அதிமுகவில் இணைகிறாரா கே.சி.பழனிசாமி?

கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அதிமுக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற அவர், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், CM ஆக வேண்டும் என EPS-க்கு எண்ணம் இருந்தால் தற்போது தனித்தனியாக பிரிந்திருப்பவர்களை இணைத்து அதிமுக மேடையில் நிறுத்தலாம் எனவும் தனது மனதில் இருப்பதை போட்டுடைத்தார்.
News December 28, 2025
மாதவிடாய் நேரத்தில் இத குடிக்காதீங்க!

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது ➤தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் ➤மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் ➤ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது. SHARE.
News December 28, 2025
BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகு, மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபருடன் இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும், கூட கைது நடவடிக்கை தொடர்வது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


