News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
இபிஎஸ் அதிரடி.. செந்தில் பாலாஜி பதற்றம்

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், அதனை சரிசெய்யும் பொருட்டே EPS டெல்லி சென்றுள்ளாராம். திமுகவிற்கு உதவும் IAS, IPS அதிகாரிகள் பட்டியலை கொடுப்பதோடு அமைச்சர் KN நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், அமித்ஷாவிடம் EPS வலியுறுத்தவுள்ளாராம். இதனால் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 2, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
News March 2, 2026
மகளிருக்கு ₹1000.. ஏன் சிலருக்கு பொத்துட்டு வருது? ரோஜா

CM ஸ்டாலின் மகளிருக்கு ₹5000-ஐ கொடுத்ததால் பலருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என ரோஜா கூறியுள்ளார். அதனால்தான் அதை சிலர் ’பிச்சை காசு, மக்களை சோம்பேறி ஆக்குகிறார் CM’ என விமர்சிப்பதாக கூறிய அவர், ஸ்டாலின் அப்படி செய்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றார். மேலும், மிடில் கிளாஸ் மக்களுக்கு ₹1000 பெரிய விஷயம் எனவும், ஏழைகளுக்கு கொடுத்தால் மட்டும் ஏன் இப்படி பொத்துக்கொண்டு வருகிறது என்றும் கேட்டுள்ளார்.


