News April 13, 2024

சம்பளத்துடன் விடுமுறை வழங்க ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 19.04.2024 அன்று தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

தி.கோடு அருகே மர்ம மரணம்: போலீஸ் விசாரணை!

image

திருச்செங்கோடு வீரராகவ முதலியார் தெருவைச் சேர்ந்த நகைத்தொழிலாளி பிரசன்னபூபதி (38), நேற்று சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு விற்பனைக்கூடத்திலும், பாசிப்பயிறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விற்பனைக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு நகல்களுடன் விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!