News April 21, 2024
சமையல் செய்த போது தீப்பிடித்து மூதாட்டி பலி

வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (72). இவர் கடந்த 10ம் தேதி சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது இதில் காயமடைந்த ருக்மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி நேற்றிரவு (ஏப்ரல் 20) இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
வேலூரில் இன்ஜினியரிங் படித்தால் வேலை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – ADA), காலியாகவுள்ள பிராஜெக்ட் சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப உள்ளது. 137 காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்ஜினியரிங் டிகிரி, மாஸ்டர் டிகிரி, Ph.D படித்தால் போதும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90,789 முதல் ரூ.1,08,073 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News April 19, 2025
17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.