News April 9, 2025
சமையல் எண்ணெய் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி துறைமுகம் 2024 – 25 நிதியாண்டில் 4,70,352 டன் சமையல் எண்ணெய் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2023 இதே வேளையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 581 டன்கள் மட்டுமே கையாண்டு இருந்தது. சமையல் எண்ணெய் கையாள்வதில் துறைமுகம் 14.28% வளர்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
News April 17, 2025
11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 11துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், புதூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த 11 பேரை நேற்று இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News April 17, 2025
வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42,000 விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.