News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரத்தில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<
Similar News
News July 11, 2025
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி – ராமதாஸ் குற்றச்சாட்டு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News July 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 12.07-2025 ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர், வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டைகோரும் மனுக்களை பதிவு செய்து பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
திண்டிவனம்; தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை திண்டிவனம்புனித அன்னாள் கலை & அறிவியல் கல்லூரி, நடைபெற உள்ளது. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.