News December 11, 2025
சமையலறை ஆயுதங்களோடு பெண்கள் வரவேண்டும்: மம்தா

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால், சமையலறையில் உள்ள ஆயுதங்களை (பாத்திரங்கள்) கொண்டு பெண்கள் போராட வேண்டும் என மேற்கு வங்க CM மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். பெண்களா (அ) பாஜகவா, யார் சக்தி வாய்ந்தவர்கள் என தான் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மம்தா, தேர்தலில் பாஜக பணத்தை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
Similar News
News March 6, 2026
நாளை 4 மணிநேரம் வீட்டை விட்டு வெளியே வராதீங்க

மாசி மாதமே இன்னும் முடியவில்லை. அதற்குள் வெயில் மண்டையை பிளக்க தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று வெயில் சதமடித்த (100°F) நிலையில், இன்று வேலூர், கரூர் பரமத்தி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதையும் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், இனிவரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதனால், பகல் 11 – மதியம் 3 வரை அவசியமின்றி வெளியே செல்லாதீங்க. உங்க ஊரில் வெயில் எப்படி?
News March 6, 2026
தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

மது அளவாகத்தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்னைகள் வரும். பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் தினமும் 2 பீர் குடித்தால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல், துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. பீர் குடிக்கும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க?
News March 6, 2026
பேச்சுவார்த்தைக்கே இடமில்லை சரணடையுங்கள்: டிரம்ப்

ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும், அதனை மீண்டும் உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்களும் எங்களது கூட்டாளிகளும் சேர்ந்து ஈரானை பொருளாதாரத்தில் முன்பை விட வலிமையான நாடாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் & அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் 7-வது நாளை கடந்துள்ளது.


