News March 22, 2026
சமைக்க மறுத்த கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்

<<19323558>>சாம்பார் வைக்காததால்<<>> மனைவியை கணவன் கொன்ற அதிர்ச்சி நீங்கும்முன், ம.பி.யில் கீரை சமைக்கவில்லை என கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’இப்ப தாங்க சமையல் முடிச்சேன், கீரையை அப்புறம் சமைக்கிறேன்’ என மனைவி சொல்ல, ஆத்திரமடைந்த கணவன், கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை 200 அடி தொலைவுக்கு இழுத்து சென்று வயலில் கிடந்த கோடரியை எடுத்து வெட்டி கொன்றுள்ளான். இவனை என்ன செய்வது?
Similar News
News April 7, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 21 டாலர்கள் குறைந்து 4,650 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையானது ஏற்ற இறக்கமின்றி நிலையாக 1 அவுன்ஸ் 73 டாலர்களாக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நம்மூர் சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. நேற்று காலையில் சவரனுக்கு ₹1,120 குறைந்து மாலையில் ₹1,440 உயர்ந்து ₹1,11,920 ஆனது கவனிக்கத்தக்கது.
News April 7, 2026
இந்தியாவில் பெட்ரோல் விலை ₹1 கூட உயரவில்லை: அமித் ஷா

கொரோனாவை போலவே எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியையும் மோடி அரசு மோசமாக கையாள்வதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலளித்து புதுச்சேரியில் பேசிய அமித் ஷா, சிலிண்டர், எரிபொருள் விவகாரத்தில் ராகுல் காந்தி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாகிஸ்தானில் தான் என்றும், PM மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பெட்ரோல் விலை ₹1 கூட உயரவில்லை எனவும் தெரிவித்தார்.
News April 7, 2026
தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?

லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தன்னிடம் ₹1,048 கோடி சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரிடம் 19,233 கிராம் தங்கம் உள்பட ₹139 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹909 கோடிக்கும் அசையா சொத்துகளும் உள்ளது. அவரது கணவரான மார்ட்டினிடம் ₹3,262 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹887 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


