News September 11, 2025
சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர் கைது

வாலாஜா சார்ந்த புகைப்படக் கலைஞர் கிருஷ்ணன், தனது சமூக வலைத்தளத்தில் இரு மதத்திற்கு இடையே பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த தமுமுக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மஜக உள்ளிட்ட நிர்வாகிகள் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்தனர்.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 11, 2025
ராணிப்பேட்டை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) ஷேர் பண்ணுங்க.
News September 11, 2025
ராணிப்பேட்டை: மாதம் ரூ.1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <