News March 30, 2024
சமூக நீதி, சம நீதி என திமுக பேசுவதாக அண்ணாமலை காட்டம்
சமூக நீதி, சம நீதி என பேசும் திமுக அவர்களது குடும்பத்தை வளர்ப்பது, அவர்களது பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்குவது, அவர்களது உறவினர்களை அமைச்சர் ஆக்குவது, இது தான் அவர்களின் சமூக நீதி எனவும், திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்படுவதால் பயந்து பயந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என அண்ணாமலை இன்று பேசினார்.
Similar News
News November 19, 2024
மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இன மாணவர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
குளத்தில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு
நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 58. இவர் என்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பிய அவர் தனது வீட்டின் அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பாஸ்கர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி வெளிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 19, 2024
டைடல் பார்க் அமையும்இடத்தை மாற்ற கோரிக்கை
நாகை அருகே செல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் மாவட்ட வளர்ச்சி குழுமத்தினர் விளை நிலங்களில் டைடல் பார்க் அமைவதை கைவிட்டு நகரின் மத்தியில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே அமைக்க வலியுறுத்தி நேற்று மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்