News April 2, 2025
சமூக சேவைக்கு விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் 2025ஆம் ஆண்டு மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.விண்ணப்பதாரர்கள் வரும் 30ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
News April 3, 2025
கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
News April 3, 2025
கள்ளக்குறிச்சியின் பெயருக்கு பொருள் இதுவா?

கள்ளக்குறிச்சி, கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் “கல்லைக்குறிச்சி” என பொறிக்கப்பட்டுள்ளதாகவும், காலப்போக்கில் மருவி கள்ளக்குறிச்சி என பெயர் மாறியதாகவும் கூறப்படுகிறது. ‘கல்லை’ என்பது அங்கிருக்கும் கல்வராயன் மலையில் இருந்து வந்தது என்றும் ‘குறிச்சி’ என்பது மலைகள் சூழுந்த ஊர் என்பதை குறிக்கும் என்றும் கூறுகின்றனர். ஷேர் பண்ணுங்க