News December 6, 2024
சமூகநீதி புரட்சியாளரை நினைவில் ஏந்துவோம்!

கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்பட்ட நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வு உயர வட்டமேசை மாநாட்டில் வாதாடிய குரல் அற்றவர்களின் குரலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். பெரும்பான்மை மக்களின் சமூக விடுதலைக்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த பெருந்தகை. நமக்கு உரிமை அளித்த அரசியலமைப்பை வடிவமைத்த அண்ணலின் 68ஆவது நினைவு நாளில் அவர் ஏற்படுத்திய சமூக புரட்சியை நினைவில் ஏந்துவோம்.
Similar News
News April 29, 2025
அரசியல் பிரமுகரின் மகள் சடலமாக மீட்பு

பஞ்சாப் AAP பிரமுகர் தேவேந்திர் ஷைனியின் மகள் வன்ஷிகா ஷைனி (21), கனடாவின் ஒட்டாவா பீச் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2023-ல் கனடா சென்ற அவர், கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். ஏப்.25-ல் வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறிச் சென்றதாக சக தோழிகள் கூறியுள்ளனர். தனது மகளின் சடலத்தை தாயகம் கொண்டுவர மத்திய அரசுக்கு தேவேந்திர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 29, 2025
சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.
News April 29, 2025
யார் இந்த பி.ஆர்.கவாய்?

SC-ன் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார். 1960-ல் மகாராஷ்டிராவில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின், 2019-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள். K.G.பாலகிருஷ்ணனுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்கும் 2-வது தலித் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.