News March 1, 2026

சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

image

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 7, 2026

பைனலில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

image

அதிரடி பேட்டிங்கால் மிரட்டி வந்த அபிஷேக் சர்மா, WC-ல் தடுமாறி வருகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் வெற்றியில் உள்ள அணியின் காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என முடிவு செய்துள்ளனராம்.

News March 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 7, 2026

போர் பதற்றம்… ஈரானுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

image

பிராந்திய போர் பதற்றம் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன், EAM ஜெய்சங்கர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ஈரானின் தற்போதைய சூழல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும் அதில் பேசப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை வெளியுறத்துறை அமைச்சருடன் அப்பாஸ் பேசியுள்ளார். அப்போது தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்க உதவியதற்காக அப்பாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!