News January 27, 2026
சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 27, 2026
உரிமைத் தொகை உயர்வு.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

சென்னையில் இன்று & நாளை நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை, CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பை CM வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ₹1,000 உரிமைத் தொகை உயர்த்தப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதேநேரம், வரும் தேர்தலில் மகளிர் வாக்குகளை கவரும் வகையில் வாக்குறுதிகளை திமுக தயார் செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
News January 27, 2026
ரேஷன் கார்டு வகையை மாற்றுவது எப்படி?

PHH, AYY வகை ரேஷன் கார்டுகளுக்கு அனைத்து அத்தியாவசிய ரேஷன் பொருள்களும் கிடைக்கும். NPHH கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இந்த கார்டுகளை மாற்ற <
News January 27, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. இனிப்பான செய்தி வந்தாச்சு!

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. ஒருவேளை ஜன நாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் தர வேண்டும் என்று CBFC-க்கு சென்னை HC உத்தரவிட்டால், சான்றிதழ் பெறும் வேலைகள் ஓரிரு நாள்களில் முடிந்துவிடும். இதனால், படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


