News January 7, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முறைகேடு

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடை சேர்ந்த செல்வராஜ் என்பவர் அன்னதான திட்டத்திற்கு ரூ.5,001 பணம் வழங்கியுள்ளார். இதற்கு உரிய ரசீது வழங்காமல், போலி ரசீது ஒன்றினை பணியில் இருந்த ஊழியர்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 பேரை பணிநீக்கமும், ஒருவரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

Similar News

News February 9, 2026

திருச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

திருச்சி: 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் !

image

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!